ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் சென்னையில் மட்டும் 211 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்!

தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் சென்னையில் மட்டும் 211 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்!

மாதிரி படம்

மாதிரி படம்

பட்டாசு கழிவுகளை  முதற்கட்டமாக 50 மெட்ரிக் டன்  கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தம் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததில் சென்னையில் கடுமையான கற்று மாசு ஏற்பட்டது. பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌக்கார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் அதிகபட்சமாக காற்று மாசு அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

    இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாகக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகளை தனியாக சேகரித்து கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருதகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 23.10.2022 அன்று 792 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும் 24.10.2022 அன்று 63.76 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், இன்று (25-10-2022) 133.40 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் என மொத்தம் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆபத்தான நிலையில் சென்னை? அச்சுறுத்தும் காற்று மாசு! - மாசு கட்டுப்பாடு வாரியம் அலெர்ட்!

    இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசு கழிவுகளை  முதற்கட்டமாக 50 மெட்ரிக் டன்  கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தம் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள பட்டாசுக் கழிவுகனை அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Chennai, Chennai corporation, Fire crackers