கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் பாதாள சாக்கடை அல்லது கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பொழுது விஷ வாயு தாக்கி இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு 10 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை / கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளின் போது இறந்த நபர்களின் வாரிசுதாரர்களை கண்டறிந்து இழப்பீடாக ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இனிவரும் காலங்களில் ரூ.15 இலட்சமாக அதிகரித்தும், மேலும் ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ரூ.1.50 இலட்சம் கூடுதலாக வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. பாதாள சாக்கடை/செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்டவர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ஈடுபடுத்தப்பட்டவராக இருந்தால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
பாதாள சாக்கடை செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்டவர் தனியார் அல்லது ஒப்பந்ததாரரால் ஈடுபடுத்தப்பட்ட நபராக இருந்தால், அந்த இழப்பீட்டுத் தொகையானது, இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்/ஒப்பந்ததாரர்/முதலாளியால் வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட தனியார் முதலாளிக்கு முழு இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தும் திறன் இல்லை என்றால் மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதியிலிருந்து, இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செலுத்தவேண்டும்.
பாதாள சாக்கடை/செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி அமைப்புகளால் பணியமர்த்தப்பட்டவராக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முதன்மை முதலாளிகள் இழப்பீட்டுத் தொகையை இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு தங்கள் சொந்த ஆதாரங்களில் இருந்து செலுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, Manual scavenging, Tamilnadu govt