Home /News /chennai /

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக 200 பக்க அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக 200 பக்க அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

டேவிதார் ஐ.ஏ.எஸ்

டேவிதார் ஐ.ஏ.எஸ்

தனது 200 பக்க அறிக்கையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தொய்வு, முறைகேடுகளில்  யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக  டேவிதார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.

    கடந்த 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி ஸ்மார்ட் பயன்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப உலக தரத்தில் நகரங்களை மேம்படுத்துவது ஸ்மார்ட்சி சிட்டி திட்டத்தின் குறிகோளாகும். 

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.  இந்த நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற தலா ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதி தொகையை செலவிட ஒப்புக்கொண்டன. மேலும் அந்தந்த மாநகராட்சிகளும் தொகையை வசூல் செய்து செலவிடலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு நகரத்தையும்  ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற 5 ஆண்டுகள் கெடு விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட நகரங்கள் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. 

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, சென்னையின் முக்கிய பகுதிகளில் நீர் தேங்கி நின்று பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக அமல்படுத்தாததே, சென்னை நீரில் மூழ்க காரணம் என கூறினார். மேலும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய ஆணையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். அதனை தொடர்ந்து ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி P.W.C டேவிடார் தலைமையில், கடந்த மார்ச் மாதம் விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: உதய் உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்.. உடற்பயிற்சிதான் காரணம் - மு.க.ஸ்டாலின்

    இதனையடுத்து சென்னை, கோவை, மதுரை,   தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு நகரங்களில் தீவிர விசாரணை மேற்கொண்ட ஆணைய தலைவர் டேவிதார்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அறிக்கையை சம்ர்ப்பித்தார். தனது 200 பக்க அறிக்கையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தொய்வு, முறைகேடுகளில்  யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக  டேவிதார் தெரிவித்துள்ளார்.
    Published by:Siddharthan A
    First published:

    Tags: Chennai, CM MK Stalin, Smart City

    அடுத்த செய்தி