ஹோம் /நியூஸ் /சென்னை /

டிரைலர் லாரி ஏறியதில் இளம்பெண் பலி.. தந்தை கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்

டிரைலர் லாரி ஏறியதில் இளம்பெண் பலி.. தந்தை கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்

சென்னை விபத்து

சென்னை விபத்து

Chennai | சென்னையில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் நிறுவனத்திற்கு சென்ற ஐடி பெண் ஊழியர் டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இருடைய மகள் 24-வயதான கீர்த்தனா ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு செல்வதற்காக கீர்த்தனா தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மாம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

  அப்பொழுது பொன்மார் பகுதியை கடக்கும்போது அதே மார்கத்தில் இவர்கள் பின்னால் கட்டுமான பணிக்கு கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி வந்தது. அப்போது ஓட்டுநர் ஹார்ன் (Horn) அடித்ததால் ஐடி பெண் ஊழியரின் தந்தை மணிவண்ணன் இருசக்கர வாகனத்தின் பிரேக் பிடித்ததால் மண் சறுக்கி நிடுதடுமாறி சாலையின் வலது புறத்தில் கிழே விழுந்துள்ளனர்.

  பின்னால் அமர்ந்து வந்திருந்த ஐடி பெண் ஊழியர் கீர்த்தனா கீழே விழ பின்னால் அதிவேகமாக வந்து கொண்டிருந்த டிரெய்லர் லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. டிரெய்லர் லாரி சக்கரம் ஐடி பெண் ஊழியர் கீர்த்தனா தலை மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  தந்தை மணிவண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

  தந்தை கண்முன்னே மகள் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  உடனே சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கீர்த்தனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுமான நிறுவன கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஓட்டுநர் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

  Also see... மயங்கிய ஜெயலலிதா.. 4 பேர் குற்றவாளிகள்.. ஜெ மரணத்தில் பல திடுக் தகவல்களை சொன்ன ஆணையம்! முழுத் தகவல்!

  தன்னுடைய பெண் விபத்தில் சிக்கிய உயிரிழந்து விட்டார் என தகவல் அறிந்ததும் அவருடைய தாய் ஓடி வந்து மகளின் உடல் அருகே கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய டிரெய்லர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Dead, Road accident