சமீபகாலமாக இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் குழந்தைகளுக்கு எளிதில் ஆபத்தை விளைவிக்கும் பொம்மைகளை கண்டறிந்து அந்தவகையான பொம்மைகளை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சீனாவில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் மூலம் வந்த பல லட்சம் மதிப்புள்ள போலி மற்றும் பயனர்களுக்கு மிக எளிதில் ஆபத்தை விளைவிக்கும் மின் சாதன பொருட்களை துறைமுக இடத்திலேயே வைத்து பறிமுதல் செய்துள்ளனர்.
இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகளுக்கு கடந்த 10ம் தேதி ரகசிய தகவல் ஒன்று வந்தது. அதில் சீனாவில் இருந்து பெரு மதிப்பிலான மின்சாதன பொருட்கள் கண்டெய்னர் மூலமாக சென்னை வந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சீனாவில் இருந்து வந்த கண்டெய்னர் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் ராயபுரம் கண்டெய்னர் சரக்கு முனையம் யார்டில் சீனாவில் இருந்து வந்த கண்டெய்னர்கள் இருப்பது தெரியவந்தது. அந்த கண்டெய்னர்களில் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலியான எளிதில் ஆபத்தை விளைவிக்க கூடிய மின் சாதன உபகரணங்கள் இருப்பது தெரியவந்தது.
ரூ.672 விலை உயர்ந்த LED பல்புகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பிளக்குகள், கேபிள்கள், மின்சாதன உதிரி பாகங்கள் ஆகியவை போலியாக உருவாக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. போலியாக உருவாக்கப்பட்ட இந்த பொருட்கள் BIS சட்டம் 2016-ஐ மீறி எளிதில் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சீனாவில் இருந்து போலியாக உருவாக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைத்தது யார்? போலி உபகரணங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது யார்? என சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News