Home /News /chennai /

சென்னை வடபழனியில் அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து விபத்து - போலீசார் விசாரணை

சென்னை வடபழனியில் அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து விபத்து - போலீசார் விசாரணை

சென்னை வடபழனி

சென்னை வடபழனி

சென்னை வடபழனியில் நேற்று மாலை திடீரென அடுத்தடுத்த இரண்டு பயங்கர சத்தத்தோடு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை வடபழனியில் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடபழனி அழகிரி நகர் 5வது தெருவில் அக்பர் அலி என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருசக்கர வாகன உதி ரிபாக கடையும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் குடும்பங்களும் வசித்து வருகின்றன.

    மூன்றாவது மாடியில் இரண்டு இளைஞர்கள் மட்டுமே தங்கி வந்துள்ள நிலையில் நேற்று பணி காரணமாக இரண்டு இளைஞர்களும் வெளியில் சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென  பயங்கர சத்தத்தோடு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அசோக் நகர், தி.நகர், கோயம்பேடு ஆகிய நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.



    உள்ளே சென்று பார்த்தபோது பயன்பாட்டுக்காக வைத்திருந்த இரண்டு சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியதும் அதனால் தீ விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.



    மூன்றாவது தளத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. ஆனால், வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமாகின. சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Accident, Chennai

    அடுத்த செய்தி