முகப்பு /செய்தி /சென்னை / உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பெண்!

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பெண்!

கடத்தல் தங்கம்

கடத்தல் தங்கம்

Chennai gold smuggling | கைப்பை, உள்ளாடை என பல இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து வந்த 4 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

துபாய், சிங்கப்பூர், கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து ஷு, உள்ளாடைகளில் கடத்தி வந்த ரூ. 1 கோடியே 8 லட்சத்தி 15 ஆயிரம்  மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேரை கைது செய்தனர்.

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள்  சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர்.  அவரிடம் இருந்து ரூ.25,43,000  மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த பெண்ணின் கைப்பையில் இருந்த ரூ.27,43,000 மதிப்புள்ள 550 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த வாலிபரை சோதனை செய்ததில் காலில் இருந்த ஷுவில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. வந்த ரூ. 24,13,000 மதிப்புள்ள 484 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். கொழும்பில் இருந்து வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த  ரூ. 31,16,000 மதிப்புள்ள  625 கிராம் தங்கத்தை  கைப்பற்றினார்கள்.

பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ. 1,08,15,000 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலின் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என  விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர்: சுரேஷ், சென்னை.

First published:

Tags: Chennai, Chennai Airport, Local News, Smuggling