Home /News /chennai /

காதலியின் இரண்டாவது கணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. காதலன் வெறிச்செயல் - தாம்பரத்தில் பயங்கரம்

காதலியின் இரண்டாவது கணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. காதலன் வெறிச்செயல் - தாம்பரத்தில் பயங்கரம்

தாம்பரம் கொலை முயற்சி

தாம்பரம் கொலை முயற்சி

தன் காதலியை அபகரித்த கோகுலை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயகுமார் இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tambaram, India
    தாம்பரம் அருகே இரண்டு பேர் திருமணம் செய்து கொண்ட பெண், முன்னாள் காதலனால் இரண்டாவது கணவரை ஓட ஓட வெட்டி கொலை முயற்சி

    சென்னை தாம்பரம் அடுத்த கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 27). கடந்த ஞாயிற்றுக்கிழமை 5பேர் கொண்ட கோகுலை வீடு புகுந்து அழைத்து சரமாரியாக வெட்டி  கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கோகுலை மீட்ட போலீஸார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோகுலில் மனைவி யாஸ்மின் (வயது 24)  தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தப்பெண்ணின் முன்னாள் காதலன் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. யாஸ்மின் பள்ளியில் படித்துவந்த போது அதேப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் யாஸ்மின் குடும்பத்தினருக்கு தெரியவர அவரது பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு சையது என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணத்துக்கு பின்  மீண்டும் மலர்ந்த காதல்:

    சையது - யாஸ்மீனுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முன்னாள் காதலனான விஜயகுமார் யாஸ்மினை எதேர்ச்சையாக சந்தித்துள்ளனர். பள்ளியில் அரும்பிய காதலை திருமணத்துக்கு பின் மீண்டும் வளர்த்துள்ளனர். இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த விவகாரம் சையதுக்கு தெரியவர அவரை யாஸ்மினை பிரிந்துள்ளார்.

    இதனையடுத்து அந்தப்பெண் விஜயகுமாருடன் திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர். அடிதடி வழக்கில் கைதாகி விஜயகுமார் சிறைக்கு சென்ற நிலையில் யாஸ்மின் மற்றும் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது கோகுல் என்பவருடன் யாஸ்மினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று திருமணம் செய்துக்கொண்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த விஜயகுமார் காதலி யாஸ்மினை தேடி வந்துள்ளார்.

    Also Read: மாமுல் வசூல் செய்வதில் தகராறு; கூலிப்படை தலைவனான முன்னாள் நண்பனை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்ய முயன்ற கும்பல் கைது..

    காதலனுக்கு கம்பிநீட்டிய காதலி:

    அவர் கோகுல் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததை அறிந்து ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து அந்தப்பெண்ணை சந்தித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து தாம்பரம் போலீஸாருக்கு தகவல் தெரியவர விஜயகுமாரை அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

    தன் காதலியை அபகரித்த கோகுலை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயகுமார் இருந்துள்ளார்.  இந்நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயகுமார், அவரது நண்பர்கள் அருள்ராஜ், ஜெய்கிருஷ்ணன், பார்த்திபன், சரவணன் ஆகிய 5பேர் சென்று கோகுலை  சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சரவணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: சுரேஷ் (சென்னை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Attempt murder case, Chennai, Crime News, Tamil News

    அடுத்த செய்தி