ஹோம் /நியூஸ் /சென்னை /

மாதம் ஒருமுறை மட்டும் ஒரு வீட்டில் கொள்ளை.. ஆதரவற்றோருக்கு உதவி... போலீசிடம் சிக்கிய பலே திருடன்

மாதம் ஒருமுறை மட்டும் ஒரு வீட்டில் கொள்ளை.. ஆதரவற்றோருக்கு உதவி... போலீசிடம் சிக்கிய பலே திருடன்

திருடன் அன்புராஜ்

திருடன் அன்புராஜ்

Chennai News : சென்னை பெருங்களத்தூரில் மட்டும் கடந்த 4 மாதத்தில் மாதம் ஒரு வீடு என நான்கு வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வரதராஜன்(55). இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2ம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

  மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்று விட்டு 4ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல்போனது தெரியவந்தது.

  இதுகுறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.அப்போது தனி ஒருவனாக வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

  இதையும் படிங்க : மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு 1 சதவீதம் கூட இடமில்லை - ஈபிஎஸ் திட்டவட்டம்

  கொள்ளையனின் அங்க அடையாளங்களை கண்டுபார்த்தபோது மாதம் ஒரு முறை மட்டுமே ரயில் மூலமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் எழும்பூர் பகுதியில் உ சாலை ஓரத்தில் வசித்து வரும் அன்புராஜ் என்கின்ற அப்பு (33) என்பது தெரியவந்தது.அதன் பிறகு குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக நோட்டமிட்டு அவனை கைது செய்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

  அதில் பெருங்களத்தூரில் மட்டும் கடந்த 4 மாதத்தில் மாதம் ஒரு வீடு என நான்கு வீடுகளில் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தார். மேலும் கொள்ளையடித்த நகைகளை குறித்து கேட்டபோது அந்த நகைகளை விற்று சாலையோரம் இருக்கும் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்தார்.

  இதையும் படிங்க : சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அமைச்சர் தகவல்

  பின்னர் அவரிடம் இருந்து 11 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து அந்த நபரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உட்பட புறநகர் பகுதியில் மாதம் ஒரு முறை மட்டும் ஒரு வீட்டில் கொள்ளையடித்து எழும்பூரில் சாலையோரம் மற்றும் ரயில் நிலையம் அருகே வசித்துவரும் ஆதரவற்றோருக்கு உணவு , உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ந்து வந்தும், தனக்கு சிறைக்கு செல்வதில் எந்த ஒரு கவலையும் இல்லை என்று கூறி சிறைக்கு சென்றான்.

  செய்தியாளர் : சுரேஷ் - சென்னை

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Crime News