முகப்பு /செய்தி /சென்னை / கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொழிலதிபர் சடலமாக மீட்பு.. சென்னையில் பயங்கரம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொழிலதிபர் சடலமாக மீட்பு.. சென்னையில் பயங்கரம்

தொழிலதிபர் கொலை

தொழிலதிபர் கொலை

சென்னையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கால்வாயில் மிதந்த தொழிலதிபரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் தங்களின் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கால்வாயில் கிடந்த சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தபோது, அருகே உள்ள கால்வாயில் கருப்பு கலர் பிளாஸ்டிக் கவரில் சடலம் ஒன்று இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விருகம்பாக்கம் போலீசார் பாலித்தீன் கவரை மீட்டு பிரித்து பார்த்தபோது, அதில் நைலான் கயிறால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையிலும் ஆண் சடலமொன்று உடல் முழுவதும் ரத்தக் கறையோடு இருந்துள்ளது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன்(67) என்றும், இவர் வைப்ரேஷன் இன்ஜினியரிங் கன்சல்டிங் சர்வீஸ் கம்பெனியின் உரிமையாளர் எனவும் தெரியவந்தது. இந்த நிறுவனமானது கட்டிடத்தை உறுதித் தன்மையோடு கட்டித் தருவதற்கு பிளான் போட்டுக்கொடுக்கும் கட்டுமான நிறுவனமாகும்.

தொழிலதிபரான இவர் நேற்று நள்ளிரவு வரை தனது மனைவிக்கு தொலைபேசியில் போன் பேசியுள்ளார் எனவும் இவரது ஏடிஎம் கார்டில் இருந்து இரவு 10:40, 10:50 என இரண்டு முறை அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே பாஸ்கரனின் காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  தி.நகர் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா ஐ.பி.எஸ் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர் கடத்திக் கொலை செய்து சடலத்தை கால்வாயில் போட்டுவிட்டு சென்றனரா? என பல கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Crime News, Dead body, Murder, Murder case