ஹோம் /நியூஸ் /சென்னை /

துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா.. தீவிர பரிசோதனையில் மருத்துவத்துறை!

துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா.. தீவிர பரிசோதனையில் மருத்துவத்துறை!

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

துபாயிலிருந்து சென்னை வந்த புதுக்கோட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் அதிகரித்து வரும் BF 7 புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதையடுத்து அதிகரிக்க தொடங்கும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் இதுவரை BF 7 புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பிஎஃப் 7 அதிகரித்து வரும் நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியான நிலையில், எந்த வகையான உருமாறிய கொரோனா என கண்டறிய அவர்களுடைய மாதிரி, சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மாநில பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

First published:

Tags: Chennai Airport, Corona positive, COVID-19 Test