ஹோம் /நியூஸ் /சென்னை /

வேலை தேடும் பெண்களை குறிவைத்து பாலியல் தொழில் - சென்னையில் சிக்கிய தம்பதி

வேலை தேடும் பெண்களை குறிவைத்து பாலியல் தொழில் - சென்னையில் சிக்கிய தம்பதி

தம்பதி கைது

தம்பதி கைது

Tiruvottiyur | வெளியூரில் இருந்து வரும் இளம் பெண்களை குறிவைத்து வேலை வாங்கி தருவதாக கூறி கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த கணவன் மனைவியை வண்ணாரப்பேட்டை போலிசார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvottiyur, India

  சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அப்பர் நகரில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, உதவி ஆணையர் இருதயம் உத்தரவின் படடி,  வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாயர் தவமணி தலைமையில் தனிப்படை சோதனை மேற்கொண்டனர்.

  அதில் அங்கு இரண்டு பெண்களை வைத்து கணவன் மனைவி இருவரும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. வெளியூரில் இருந்து வேலை தேடிவரும் பெண்களை இவர்கள் குறிவைத்து தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் விசாரணையில் தெரிந்தது.

  இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் அரசு காப்பக்காத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கணவன் சதீஷ்குமாரையும் மனைவி சரளாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து மூன்று செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

  Also see... சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..! சாலையில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி

  வேலை தேடிவரும் வெளியூர் பெண்களை குறிவைத்து ஏமாற்றி வீட்டில் தங்கவைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: அசோக் குமார், திருவெற்றியூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Sexual harassment, Thiruvotriyur