ஹோம் /நியூஸ் /சென்னை /

40 வெடிகுண்டுகள்... 36 பட்டாகத்திகள்... பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

40 வெடிகுண்டுகள்... 36 பட்டாகத்திகள்... பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

ரவுடிகள் அப்பு மற்றும் பிரகாஷ்

ரவுடிகள் அப்பு மற்றும் பிரகாஷ்

யாரை கொலை செய்வதற்காக அவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தியுடன் பதுங்கி இருந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

நீண்ட நாட்களாக நீதிமன்ற விசாரணையின் போது வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த ரவுடி வெள்ளை பிரகாஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து பயங்கரமான வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த A ரவுடியானவர் பிரகாஷ்(எ) வெள்ளை பிரகாஷ். இவர் மீது சிபிசிஐடி உட்பட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல்,ஆயுத தடைச் சட்டம், வெடிபொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்கு பதிவுகள் நிலுவையில் உள்ளன. நீண்ட நாட்களாக நீதிமன்ற விசாரணையின் போது வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த ரவுடி வெள்ளை பிரகாஷை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தீவிர குற்றத்தடுப்பு போலீசாரும் ரவுடி வெள்ளை பிரகாஷை பல மாதங்களாக தேடி வந்தனர். இதனையடுத்து பூந்தமல்லி அருகே ரவுடி வெள்ளை பிரகாஷ் தனது நண்பருடன் தலைமறைவாக இருப்பதும் குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்ததையடுத்து தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியான அப்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பட்டக்கத்திகள்

ரவுடிகள் தலைமறைவாக இருந்த இடத்தை சோதனை செய்தபோது 40 நாட்டு வெடிகுண்டுகள், 36 பட்டாக்கத்திகள், ஒரு துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகளையும் கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நாட்டு வெடிகுண்டுகள்

இதையும் படிங்க : தமிழகத்தில் 5, 7ஆம் தேதிகளில் மிரட்டப்போகும் கனமழை... இந்திய வானிலை மையம் அலெர்ட்!

தீவிர குற்ற தடுப்பு போலீசார் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகளையும் கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைக்கும் போது இரண்டு ரவுடிகளும் தப்பி ஓட முயற்சி செய்ததில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனால் இரண்டு ரவுடிகளுக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இரண்டு ரவுடிகளையும் கொடுங்கையூர் போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக இருந்த வெள்ளை பிரகாஷ் மற்றும் அப்பு ஆகிய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீட்டிய சதி திட்டம்? என்ன யாரை கொலை செய்வதற்காக அவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தியுடன் பதுங்கி இருந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Tamil News