Home /News /chennai /

தாம்பரம் அருகே பாரில் வெடிகுண்டு வீசிய நபர்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தாம்பரம் அருகே பாரில் வெடிகுண்டு வீசிய நபர்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

மதுபான பாரில் வெடிகுண்டு வீசியவர்

மதுபான பாரில் வெடிகுண்டு வீசியவர்

Chennai | சென்னை அருகே மதுபான பாரில் வளர்க்கும் செல்லப்பிராணியை ஊழியர்கள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்து பார் மீது வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பாண்டியன் என்பவர் அனுமதி பெற்று பார் ஒன்றை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில் மதுபான பாருக்கு இளைஞர் ஒருவர் சென்று கையில் மறைத்து வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார்.

    அந்த வெடிகுண்டால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக மாறியது. நல்வாய்ப்பாக பாரில் இருந்த ஊழியர்கள் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் குறித்து பார் உரிமையாளர் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் நண்பருடன் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இருசக்கர வாகனத்தின் பதிவு என்னை வைத்து விசாரித்த போது வண்டலூர் பகுதியை சேர்ந்த சொக்கா என்கின்ற சொக்கலிங்கம் (வயது-21)என தெரியவந்து. உடனே சொக்கலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து ஓட்டேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    Also see... கனியாமூர் பள்ளி விவகாரம் - மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு 

    விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டியன் நடத்திவரும் மதுபான பாருக்கு சென்ற சொக்கலிங்கம் மது அருந்தி விட்டு வீட்டுக்கு செல்லும்போது பார் ஊழியர்கள் அங்கு செல்லமாக வளர்த்து வந்த நாட்டு நாயை சொக்கலிங்கம் என்பவர் எடுத்துச் செல்லும் போது அதை தடுத்துள்ளனர். அதனால் பார் ஊழியர்கள் மற்றும் சொக்கலிங்கம் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் அது  கைகலப்பாக மாறியது.

    அதன் பிறகு இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் பாருக்கு சென்ற போலீசார் சமரசம் பேசி சொக்கலிங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் பழிவாங்கும் நோக்கத்தோடு வீட்டுக்குச் சென்ற சொக்கலிங்கம்  யூட்யூபில் நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிப்பது என்று பார்த்து நாட்டு வெடிகுண்டை தயாரித்து நேற்று இரவு மதுபான பாருக்கு சென்று மது குடித்துவிட்டு அனைவரும் சென்ற பிறகு அங்கு நாட்டு வெடிகுண்டு வீசியதாக குற்றவாளி பகீர் வாக்குமூலம் அளித்தார்.

    நாட்டு வெடிகுண்டு தயாரித்த சொக்கலிங்கத்திற்கு உதவியாக இருந்த வண்டலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது-24) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: சுரேஷ், விமானநிலையம் சென்னை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bomb blast, Chennai, Tambaram

    அடுத்த செய்தி