ஹோம் /நியூஸ் /சென்னை /

படுத்துக்கொண்டே மக்காச்சோளம் சாப்பிட்ட நபருக்கு நுரையீரலில் சிக்கிய துயரம்..!

படுத்துக்கொண்டே மக்காச்சோளம் சாப்பிட்ட நபருக்கு நுரையீரலில் சிக்கிய துயரம்..!

நுரையீரலில் சிக்கிய சோளக்கருது

நுரையீரலில் சிக்கிய சோளக்கருது

பாதிக்கப்பட்டவருக்கு ப்ரோன்கோஸ்கோபி சிகிச்சை முறை மூலம் அந்த சோளத்துண்டை அகற்றி வெளியே எடுத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சாப்பிடும் போது நுரையீரலில் சோளக்கருது துண்டு சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் உயிரை காத்துள்ளனர். சென்னை மஹிந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவருக்கு மக்காச்சோளம் சாப்பிடும்போது அதன் துண்டுகள் நுரையீரலில் சிக்கிக்கொண்டது.

இவர் அந்த சோளத்தை படுத்துக்கொண்ட சாப்பிட்ட காரணத்தால் அது அவரது சுவாசக்குழாய் வழியாக சென்று நுரையீரலில் சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு விட சிக்கல் ஏற்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்கள் ரேலா மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அங்கு அந்த நபருக்கு சிடி ஸ்கேன் மற்றும் ப்ரோன்கோஸ்கோபி பரிசோதனை செய்தனர். அதில் அவரது வலது நுரையீரலின் அடிப்பகுதியில் சுமார் 3 செமீ அளவு சோளத்துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நுரையீரல் நிபுணர் பென்ஹூர் ஜோயல் ஷட்ராக் தலைமையிலான மருத்துவக் குழு பாதிக்கப்பட்டவருக்கு மயக்க மருந்து வழங்கி அந்த சோளத்துண்டை ப்ரோன்கோஸ்கோபி முறை மூலம் அகற்றி வெளியே எடுத்தனர்.

இதையும் படிங்க: உலகின் நீளமான நீர்வழி சொகுசு கப்பல் பயணம் - வராணசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இதைத்தொடர்ந்து அந்த நபரின் நுரையீரல் செயல்பாடு சீரானது. சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் அந்த நபர் அன்றைய தினமே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். பாதிக்கப்பட்டவர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் அது இருமல், நிமோனியா மற்ற நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவமனையில் தெரிவித்தனர்.

First published:

Tags: Chennai, Lungs health, Sweet Corn