ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை..!

சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை..!

கனமழை

கனமழை

Chennai rain | விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai

  சென்னையில் இரவில் இருந்து விடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

  தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  இதன் காரணமாக  தமிழகத்துக்கு 13ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  Also Read:  Tamil News Live: விடிய விடிய விடாமல் கொட்டும் மழை..

  இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, கிண்டி, ராமபுரம், போரூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளை சுற்றியுள்ள பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Heavy rain, Weather News in Tamil