சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. பூண்டி அணையில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக திறக்கப்பட்டு வரும் நீராலும் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் காரணமாகவும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது .
இதில் புழல் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் 92 சதவிகிதமும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை அணை 100% தண்ணீர் நிரம்பி உள்ளது .பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதில் 584 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மக்கள் குடிநீருக்காக 295 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.
புழல் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3082 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 918 கன அடி மழை நீருடன் சேர்த்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 1128 கன அடி நீர்வரத்து வருகிறது. வினாடிக்கு 202 கன அடி சென்னை மக்களின் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3279 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 290 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விவசாய தேவைக்கு 5 கனஅடியும், சிப்காட் குடிநீர் தேவைக்கு 3 கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
Also see...சிதம்பரம் அருகே வெள்ளதால் தீவாக மாறிய கிராமம்...
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 133 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஏரியில் வெறும் 12.22 சதவீதம் தண்ணீர் உள்ளது.. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அணை முழு கொள்ளளவை எட்டியதாலும் 25 கன அடி நீர் வருவதாலும் 25 கன அடி உபரி நீர் அணையின் மதகில் அப்படியே வெளியேற்றப்பட்டு கடலுக்கு செல்கிறது.
செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chembarambakkam Lake, Chennai, Puzhal, Sembarambakkam