ஹோம் /நியூஸ் /சென்னை /

தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்: வரைவு பட்டியலை வெளியிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்: வரைவு பட்டியலை வெளியிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

 சத்யபிரதா சாகு

சத்யபிரதா சாகு

Tamilnadu Election | 8 நவம்பர்  2022 வரை தமிழகத்தில் 3,46 கோடி (56.09%)  ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். மேலும் தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், இரட்டை பதிவு, இறந்தவர்கள் என கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 17.69 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மயிலாப்பூரில் உள்ள செவித்திறன் மாற்றுத்திறனாளி சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில்  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டி பதாகைகள் ஏந்தி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். அதன்பின்னர் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருங்கிணைந்த வரைவு பட்டியல் வெளியிட்டுள்ளோம். அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இரண்டு நகல்கள் கொடுக்கப்படும். மொத்தமாக தமிழகத்தில் 6,18,26,182 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

அதில் 303,95,103 - ஆண் வாக்காளர்கள், 314,23,321 - பெண் வாக்காளர்கள் மற்றும்  7758 - திருநங்கைகள் என மொத்தம்

6,66,464 லட்சம் வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது.

இதையும் படிங்க : ஆவினை தொடர்ந்து ஆரோக்யா பால் விலையும் உயர்வு!

மேலும் 1,72,211 பேர் கொண்ட குறைந்த வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது. இந்த நவம்பர் மாதத்தில் 12,13 மற்றும் 26, 27 ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகங்கள் நடைபெறும்.

இந்த முகாமினை பயன்படுத்தி பெயர்கள் திருத்தம் செய்வதற்கும், புதிதாக சேர்வதற்கும் மற்றும்  வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடைபெறும். இன்று முதல் அடுத்த மாதம்(டிசம்பர் ) 8-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இரட்டை பதிவு, மூன்று பதிவு அல்லது இரண்டு தொகுதிகளில் ஒரே வாக்காளர் இருப்பது போன்ற வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கி உள்ளோம். அதனால் கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2.44 லட்சம் இறந்த வாக்காளர்கள், பெயர்கள் நீக்கம்

15.25 லட்சம், இரட்டை பதிவு வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம் இரட்டை பதிவு, இறந்தவர்கள் என மொத்தமாக 17.69 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A பூர்த்தி செய்து நேரில் அளிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! ஏரியாவாரியாக விவரம்!

மேலும், “8 நவம்பர்  2022 வரை தமிழகத்தில் 3,46 கோடி (56.09%)  ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் சேர்க்க படிவம் 6ல் பூர்த்தி செய்த  விண்ணப்பங்களை   ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களிலும் முதல் தேதியில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 3.46 கோடி ஆதார் எண்கள் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Election Commission, Sathya pratha sahoo, Tamilnadu