முகப்பு /செய்தி /Chennai / தந்தையின் நினைவாக உள்ள பேனா... தங்க நிப் பொருத்தப்பட்ட பேனா தொலைந்தது குறித்து காங்கிரஸ் எம்.பி காவல்துறையில் புகார்

தந்தையின் நினைவாக உள்ள பேனா... தங்க நிப் பொருத்தப்பட்ட பேனா தொலைந்தது குறித்து காங்கிரஸ் எம்.பி காவல்துறையில் புகார்

வசந்த குமார்

வசந்த குமார்

Vijay Vasantha Kumar | தனது தந்தையும், வசந்த் அண்ட் கோ வின் நிறுவனர் மறைந்த வசந்தகுமார் பயன்படுத்திய பேனா என்பதால், தந்தையின் நினைவாக உள்ள அந்த பேனாவை கண்டுபிடிப்பதற்காக புகார் அளித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் தனது விலை உயர்ந்த பேனா மாயமானதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஆதரவு திரட்டுவதற்காக குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஸ்வந்த் சின்ஹா சென்னை வருகை தந்திருக்கும் பொழுது, அவரை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் சந்தித்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்தும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனா மாயமாகியுள்ளது.

குறிப்பாக தனது தந்தையும், மறைந்த வசந்த் அண்ட் கோ வின் நிறுவனர் வசந்தகுமார் பயன்படுத்திய பேனா என்பதால், தந்தையின் நினைவாக உள்ள அந்த பேனாவை கண்டுபிடிப்பதற்காக புகார் அளித்துள்ளார்.

Read More | அரசியலில் ஜெயலலிதாவின் துணிச்சல் பிடிக்கும்.. மாணவி கேள்விக்கு தமிழிசை பதில்

மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்காவை பல அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும்போது நடந்த முக்கிய கூட்டத்தில் மாயமானதால் நட்சத்திர ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பேனாவை தேடுவதற்கு புகார் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் விஜய் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பேனாவை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பேனா வெள்ளியால் ஆன, தங்க நிப்புகள் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த பேனா என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Congress, Guindy