ஹோம் /நியூஸ் /சென்னை /

காங்கிரஸ் வேட்பாளர் யார்? - தினேஷ் குண்டுராவ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

காங்கிரஸ் வேட்பாளர் யார்? - தினேஷ் குண்டுராவ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தினேஷ் குண்டுராவ்

தினேஷ் குண்டுராவ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் நம்பிக்கை தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில்  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை செய்யப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்  பேசுகையில்,“ ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. ஓரிரு நாளில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுவிடுவார். எதிரணியில் உள்ளவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை.” என்றார்.

மேலும்  ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் குண்டுராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: Congress, K.S.Alagiri