ஹோம் /நியூஸ் /சென்னை /

உச்சக்கட்டத்தை எட்டிய கோஷ்டி மோதல்.. கே.எஸ்.அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்..

உச்சக்கட்டத்தை எட்டிய கோஷ்டி மோதல்.. கே.எஸ்.அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்..

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலர் மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை மாற்றக்கோரி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை, முற்றுகையிட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக டெல்லி தலைமையிடம் சக கட்சியினர் புகாரளித்துள்ளனர்.

  பிரிக்கவே முடியாதது காங்கிரஸ் கட்சியும் -கோஷ்டி மோதலும் எனச் சொல்லிவிடலாம். அதன் சமீபத்திய பதிவாக அமைந்தது கடந்த 15ஆம் தேதி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்த உட்கட்சி மோதல்.

  கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலர் மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை மாற்றக்கோரி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை, முற்றுகையிட்டனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே கைகலப்பாகி ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு மோதல் முற்றியது.

  அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கு.. கிஷோர் கே சாமி கைது! 

  இதையடுத்து ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீதான விசாரணை வரும் 24ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனிடையே சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் அனைவரும் எழும்பூரில் ஓட்டல் ஒன்றில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  இதன் அடுத்த கட்டமாக, கே.எஸ்.அழகிரி மீது, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோஷ்டி மோதல் உச்சம் அடைந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் டெல்லி தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Congress, KS Alagiri