Home /News /chennai /

தமிழகத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி.. பயண திட்ட விவரம்

தமிழகத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி.. பயண திட்ட விவரம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhi| தேச ஒற்றுமைக்கான பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை தொடங்க உள்ள ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, சென்னையில் இருந்து காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரிக்கு செல்கிறார். அங்கிருந்து கன்னியாகுமரி படகு துறைக்கு காரில் செல்லும் அவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

பின்னர் காமராஜர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் ராகுல்காந்தி, அதன் பின்னர் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார்.

இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து 600 மீட்டர் நடைபயணத்தை மேற்கொள்கிறார். ராகுல்காந்தியுடன் 300 பேர் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 118 பேர் அவருடன் டெல்லி வரை பயணிக்கின்றனர். 100 பேர் தமிழ்நாட்டில் இருந்து நடைபயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடைபெறுகின்ற இந்திய ஒற்றுமை யாத்திரை பயண பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசுகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரும் ராகுல் காந்தி அங்கு ஓய்வு எடுக்கிறார்.

செப்டம்பர் 8ம் தேதி

8ம் தேதி காலை 6 மணிக்கு நடைபயணம் தொடங்கும் ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து புறப்படுகிறார். கல்லூரி முதல் கொட்டாரம் காமராஜர் சிலை வரை நடைபயணம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு கொட்டாரம் காமராஜர் சிலை தொடங்கி பொத்தையடி ஜங்ஷன் வரை நடக்கிறது. காலை 7 மணிக்கு பொத்தையடி முதல் வழுக்கம்பாறை வரையும், 7.30 மணிக்கு வழுக்கம்பாறை சந்திப்பு தொடங்கி சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் பள்ளி வரையும் நடக்கிறது.

பின்னர் மாலை 3 மணிக்கு சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளி தொடங்கி கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வரையும், மாலை 4 மணிக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலயம் முதல் டெரிக் சந்திப்பு வரையும் நடைபயணம் நடைபெறுகிறது.

செப்டம்பர் 9-ம் தேதி

செப்டம்பர் 9-ம் தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல் சுங்கான்கடை சந்திப்பு வரையும், காலை 6.30 மணிக்கு சுங்கான்கடை சந்திப்பு முதல் வில்லுக்குறி சந்திப்பு வரையும், காலை 7 மணிக்கு வில்லுக்குறி சந்திப்பு முதல் புலியூர்குறிச்சி சர்ச் வரையும். மாலையில் 3 மணிக்கு புலியூர்குறிச்சி சர்ச் முதல் மேட்டுக்கடை மசூதி சந்திப்பு வரையும், மாலை 4 மணிக்கு தக்கலை மேட்டுக்கடை சந்திப்பு முதல் முளகுமூடு சந்திப்பு வரையும் நடைபயணம் நடக்கிறது.

செப்டம்பர் 10ம் தேதி

செப்டம்பர் 10ம் தேதி காலை 6 மணிக்கு முளகுமூடு புனித மேரிஸ் ஐசிஎஸ்இ பள்ளி முதல் சாமியார்மடம் வரையும், காலை 6.30 மணிக்கு சாமியார்மடம் முதல் சிராயன்குழி வரையும், காலை 7 மணிக்கு சிராயன்குழி முதல் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி வரையும் பயணம் நடக்கிறது.

மாலை 3 மணிக்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முதல் குழித்துறை சந்திப்பு வரையிலும், மாலை 4 மணிக்கு குழித்துறை சந்திப்பு முதல் படந்தாலுமூடு சந்திப்பு வரையும், மாலை 4.30 மணிக்கு படந்தாலுமூடு சந்திப்பு முதல் தளச்சான்விளை வரையும் பயணம் நடக்கிறது. அன்று இரவு செறுவாரக்கோணத்தில் ராகுல்காந்தி ஓய்வெடுக்கிறார்.

செப்டம்பர் 11-ம் தேதி

செப்டம்பர் 11-ம் தேதி அங்கிருந்து பாறசாலை வழியாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி மற்றும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் தங்க, ஓய்வெடுக்க வசதியாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 60 கேர வேன்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த கேர வேன்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கேர வேனை ராகுல்காந்தி மற்றும் அவருடன் வருகின்ற தலைவர்கள் பயன்படுத்துவதற்காக பல்வேறு வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also see...150 நாட்கள்.. 3570 கி.மீ பயணம்.. கன்னியாகுமரியில் இருந்து மிகப்பெரிய யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி

இது தவிர ராகுல் காந்தி நடை பயணம் செல்லும் வழியில் மக்களை சந்திக்கவும், அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் செய்கிறார். அதன்படி அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் சென்றடையும் வரை சுமார் 50 கோடி மக்களை சந்திப்பார் எனக்கூறப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Rahul gandhi

அடுத்த செய்தி