Home /News /chennai /

சாலையில் எச்சில் துப்பிய கண்டெக்டர்... சரமாரியாக தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சாலையில் எச்சில் துப்பிய கண்டெக்டர்... சரமாரியாக தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சாலையில் எச்சில் துப்பிய கண்டெக்டர்... சரமாரியாக தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சாலையில் எச்சில் துப்பிய கண்டெக்டர்... சரமாரியாக தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கண்டெக்டரை தாக்கிய சைதாப்பேட்டை காவலர் லூயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் சாலையில் எச்சில் துப்பிய போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது எச்சில் பட்டுவிட்டதாக கூறி அந்த நபரை காவலர் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள ஜூஸ் கடையில் இன்று காலை ஒரு நபர் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்கும் போது கீழே எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது எச்சில் பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் அந்த நபரின் முகம் கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது. இதனைபார்த்த பொதுமக்கள் காவலரை பிடித்து 100க்கு கால் செய்து சைதாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், பொதுமக்கள் காயம் பட்ட நபரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான நபர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைதாப்பேட்டை போலீசாரின் விசாரணையில் தாக்குதலுக்குள்ளான நபர் பாலச்சந்திரன் என்பதும் இவர் அயனாவரம் பேருந்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.

Read More : மணமேடையில் நடனமாடி திருமணம் முடிந்த கையுடன் மணப்பெண் தற்கொலை

மேலும் பாலச்சந்திரனை கடுமையாக தாக்கிய காவலர் லூயிஸ் என்பதும் இவர் சைதாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

மேலும், பாலச்சந்திரன் இன்று காலை சைதாபேட்டையில் சர்ச்சுக்கு வந்துள்ளார். பின்பு அருகிலுள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் குடிக்கும் போது பாலச்சந்திரன் சாலையில் எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் லூயிஸ் மீது எச்சில் பட்டதாகவும் அதனால் எழுந்த வாக்குவாதம் முற்றி பாலச்சந்திரனை காவலர் லூயிஸ் தாக்கியதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கண்டெக்டரை தாக்கிய சைதாப்பேட்டை காவலர் லூயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். காவலர் லூயிஸ் தவறு செய்தது உறுதியானால், பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai

அடுத்த செய்தி