பெண் குழந்தை பிறந்ததால் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பெண் அளித்த புகாரில் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் உள்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சாய் ஸ்ருதி(31) என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் மோகனகிருஷ்ணன் உட்பட குடும்பத்தினர் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில், கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 136 சவரன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணத்தை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு திருமணம் நடந்ததாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் குழந்தை பிறக்கும் போது, ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை பிறந்தால் அழித்து விட வேண்டும் என தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்து.
Must Read : பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்கள் கைது
தொடர்ந்து பெண் குழந்தை பிறந்ததால் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை தர வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதாகவும் அந்த புகாரில் குறிப்பிப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Dowry, Dowry Cases, Girl Child