சென்னையில் வரும் புதன்கிழமை (22.02.2023) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னையில் வரும் புதன்கிழமை (22.02.2023) காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர், கே.கே நகர், மாதவரம் லெதர் எஸ்டேட், எண்ணூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணி முடிந்ததும் வழக்கம்போல் மின்விநியோகம் செய்யப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் :
தாம்பரம் பகுதி : செம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, வி.ஜி.பி சீனிவாசா நகர், கருமாரியம்மன் நகர் புதுதாங்கல் முல்லை நகர் டி.என்.எச்.பி, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கல்யான் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கிண்டி பகுதி : ராஜ்பவன், பரங்கிமலை, நங்கநல்லூர் மற்றும் ராமாபுரம் துணை மின் நிலையங்களில் தொடர்புடைய அனைத்து பகுதிகள்.
போரூர் பகுதி : மாங்காடு ஐனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், அப்பாவு நகர் கோவூர் குன்றத்தூர் சாலை ஒரு பகுதி, வி.ஜி,என், கோவூர் காலனி திருமுடிவாக்கம் சிட்கோ 8வது குறுக்கு தெரு, டவர் லைன் மெயின் ரோடு, சதீஷ் நகர் எஸ்.ஆர்,எம்.சி மகாலட்சுமி நகர், கமலா நகர், திருமுருகன் நகர் பூந்தமல்லி ப்ரீடீஸ் ரோடு, திருமால் நகர், ரோஸி கார்டன், தர்மராஜா கோயில் தெரு காவனூர் சிறுகளத்தூர், மணிமங்களம் சாலை, பெரியார் நகர், அம்பேத்கர் நகர், புதுபேர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கே.கே நகர் பகுதி : கே.கே நகர் மேற்கு, எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சின்மயா நகர், ஆழ்வார்திருநகர், தசரதபுரம், அழகிரிநகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
மாதவரம் லெதர் எஸ்டேட் பகுதி : கே.கே,ஆர் கார்டன், தபால்பெட்டி, பஜார் தெரு, உடையார் தோட்டம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
எண்ணூர் பகுதி : கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம் நகர், எண்ணூர்குப்பம், தாழங்குப்பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு. எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும். எனவே அன்றைய தினம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Local News, Power Shutdown