ஹோம் /நியூஸ் /சென்னை /

சாலையில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற மாணவன் கார் மோதி பலி : விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்!

சாலையில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற மாணவன் கார் மோதி பலி : விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்!

கார் மோதி பலியான சிவஷர்மா

கார் மோதி பலியான சிவஷர்மா

chennai News : கல்லூரி மாணவர்கள் நள்ளிரவு சாலையின் நடுவே செல்போனை தூக்கிப்போட்டு விளையாடியபோது சாலையில் சென்ற கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவஷர்மா (21), இவர் சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இவர் சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

  இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் நண்பர்களுடன் சேர்ந்து சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள டீக்கடைக்கு சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.

  அப்போது சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவற்றில் அமர்ந்து கொண்டு செல்போனை தூக்கிப்போட்டு நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

  செல்போனை தூக்கிப்போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது செல்போன் ஓஎம்ஆர் சாலையின் நடுவில் விழுந்தது.

  இதையும் படிங்க : தூத்துக்குடியில் வடமாநில இளைஞரை தாக்கி செல்போன் பறிப்பு : திருநங்கைகள் 4 பேர் கைது..!

  இதை சிவஷர்மா எடுக்க சென்றுள்ளார். அப்போது செம்மஞ்சேரியில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த ஹூண்டாய் கார்  சிவஷர்மா மீது வேகமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவன் சிவஷர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கார் ஓட்டி வந்த சவுத் பயஸ்(24) என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர் : வினோத் கண்ணன்

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Crime News