Home /News /chennai /

ஜாலியா இருக்கதான் பழகினேன்.. தொந்தரவு பண்ணாதே.. இன்ஸ்டாகிராம் காதலனால் இளம்பெண் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

ஜாலியா இருக்கதான் பழகினேன்.. தொந்தரவு பண்ணாதே.. இன்ஸ்டாகிராம் காதலனால் இளம்பெண் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

கோப்பு படம்

கோப்பு படம்

கல்லூரி மாணவி தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தான் காதலனால் ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பேஸ்புக் மூலம் பழகிய  காதலன், உல்லாசம் மட்டும் அனுபவித்து விட்டு தன்னை ஏமாற்றியதை அறிந்த பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார். கல்லூரி செல்லும் நேரம் போக மற்ற நேரங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் செலவிட்டு வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருக்கு பேஸ்புக் மூலம் சுதீஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது சுதீஷ், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் இளம்பெண்  தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தவே, ஆத்திரமடைந்த சுதீஷ், “நான் உன்னிடம் உல்லாசம் அனுபவிக்கவே பழகினேன். மற்றபடி உன் மீது காதல் எல்லாம் கிடையாது. இனிமேல் நீ எனக்கு போன் செய்து தொந்தரவு செய்யாதே” என்று கூறி அவரை விட்டு விலகிச் சென்றார். அத்துடன் அந்தப்பெண்ணுடன் பேசுவதையும் நிறுத்தினார்.  அவர் போன் செய்தாலும் கூட சுதீஷ் பேச மறுத்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தவர் கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்ட போதும் கூட, பதில் அளிக்காமல் அமைதியாக இருந்து சமாளித்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேல் அறைக்குள் சென்ற இளம்பெண் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வந்து பார்த்த போது, மாடி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பதற்றம் அடைந்த அவர்கள் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு  அந்தப்பெண் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    Also Read: பாலியல் அத்துமீறல்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என மிரட்டிய போலி டாக்டர்!

    உடனே இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்   இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் அறையை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அங்கு  அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தான் காதலனால் ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார்.
    மேலும் தனது செல்போனில் இருந்து அவரது அண்ணனுக்கு ஆடியோ பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார்.



    அதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் ஏமாற்றியதால் விரக்தியடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேஸ்புக் மூலமாக காதல் வலையை வீசி இளம் பெண்களை காதலித்தது ஏமாற்றி வரும் சுதீஷ்-ஐ காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    செய்தியாளர் : சுரேஷ் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: College girl, Crime News, Pallavaram, Suicide

    அடுத்த செய்தி