முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ... மெட்ரொ அதிகாரிகள் தகவல்

சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ... மெட்ரொ அதிகாரிகள் தகவல்

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தொடங்கியபோது 4 முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை மெட்ரோ திட்டம் 2 வது கட்டத்தில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு நகரின் 128 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 2.5 லட்சம் பேர் வரை நாள்தோறும் பயணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற அடிப்படையில் சேவை வழங்க திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 2ம் கட்ட பணிகள் தொடங்கியபோது 4 முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டது. எனினும் பயணிகள் வருகை அதிகரிப்பால் ரயில் சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல 138 ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

தற்போது சென்னை மெட்ரோ ரயில்  விம்கோ நகர் முதல் சென்ட்ரல் வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில்  இயக்கப்படுகிறது.  2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை வழங்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும், போதிய மெட்ரோ ரயில்கள் இல்லாததால் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai metro, Metro Rail, Metro timing