முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மெட்ரோ ரயிலில் இனி நெரிசல் குறையும்... வருகிறது புதிய மாற்றம்...!

சென்னை மெட்ரோ ரயிலில் இனி நெரிசல் குறையும்... வருகிறது புதிய மாற்றம்...!

மாதிரி படம்

மாதிரி படம்

வருடத்திற்கு 5 கோடிக்கும் மேலாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், அலுவலக நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1 மூலம் இயக்கப்படும் ரயில்களின், குளிர் சாதன வசதி கொண்ட  பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொது பெட்டிகளும், ஒரு மகளிர் பெட்டியும் உள்ளன.  அதோடு இரண்டு பெட்டிகளை இணைத்து ஆறு பெட்டிகளாக ஒரு ரயிலில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வருடத்துக்கு 5 கோடிக்கு மேலாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் பாதையிலும் இதேபோல 6 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai metro, Metro Rail, Metro Train