Home /News /chennai /

திமுக வெற்றிக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் காரணம் - ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திமுக வெற்றிக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் காரணம் - ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியை பிடித்தற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தான் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை தீவுத்திடலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது. தேசிய கல்வி கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பு ரத்து செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான் காரணம் என்று கூறினார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதற்காக அரசு ஊழியர்கள் பழிவாங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி பெற்ற சமயத்தில் கொரோனோ தொற்றால் அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது எனவும் அது சரியானதும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றி தரப்படும் எனவும் தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா; ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாள் இதோ

    தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்காலிக பணியில் உள்ள 16,000 ஊழியர்கள் 60 வயது வரை பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், “இபிஎஸ், ஓபிஎஸ், சிபிஎஸ் என்றாலும் அதில் ஒரு கை பார்ப்பவர் நமது எம்.கே.எஸ்” என கூறினார்.

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசுகையில், திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது உங்களது போராட்டத்தில் பங்கேற்கும், ஆட்சியில் இருந்தால் போராட்டத்தால் போடப்பட்ட வழக்கு ரத்தாகும் என கூறினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Government jobs, Tamil Nadu government

    அடுத்த செய்தி