ஹோம் /நியூஸ் /சென்னை /

மாதம் 200 பேருக்கு பயிற்சி... 2500 வேலைவாய்ப்பு.. மேடையில் உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!

மாதம் 200 பேருக்கு பயிற்சி... 2500 வேலைவாய்ப்பு.. மேடையில் உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை, கோவையில் நிறுவப்பட்டுள்ள ட்ரோன் நிறுவனத்தில், மாதம் 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஓராண்டில் 2500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  சென்னை தரமணியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

  டிட்கோ சார்பில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மேடையில் உரையாற்றினார். அதில், தமிழகம் தொழில்துறை உட்பட அனைத்து துறைகளிலும் கடந்த 15 மாதங்களில் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது , தொழில்துறையில் இந்தியளவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையை தமிழகம் பெற்றுள்ளது. கடந்த 15 மாதங்களாக நடந்த அனைத்து தொழில்முதலீட்டு மாநாடும் தமிழ்நாட்டுக்கு பலன் தரும் மாநாடாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

  2030 க்குள் தமிழக பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை அடைய வேண்டும் என்பதே இலக்கு. வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது. அதை தக்கவைத்து கொள்ள வேண்டும், அப்போது தான் திராவிட மாடல் வளர்ச்சி அடையும் என கூறியுள்ளார்.

  தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை 51.4 ஆக உள்ளது , தேசிய சராசரியை விட இது அதிகம். உற்பத்தி துறையை விட சேவைத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்றனர் , ஆனால் இரண்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் தந்து வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பதே திராவிட மாடல். டைடல் பார்க்கில் அமைந்துள்ள திறன்மிகு மையம் நாட்டில் முதல்முறையாக அமைக்கப்பட்டு மெய்நிகர் முறையில் இங்கு பயிற்சி வழங்கி வருகிறது. தமிழ்நாடு தொழில்துறையில் அதிக காப்புரிமையை பெற இந்த திறன்மிகு மையம் உதவும் என கூறினார்.

  மேலும், வான்வெளி பாதுகாப்பில் தமிழகம் எப்போதும் முதன்மையாக இருந்துள்ளது. உலகின் வலிமையான கடற்படை சோழர்களின் கடற்படை , இந்தியாவில் 1910 ல் சென்னையில்தான் முதன்முறை விமானம் தயாரிக்கப்பட்டது. வேளாண், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பில் டிரோன்கள் அதிகம் பயன்படுகின்றன. எனவே மதுரை, கோவையில் அதற்கான பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.  மாதம் 200 பேருக்கு அங்கு பயிற்சி தரப்பட்டு ஓராண்டில் 2500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் உறுதியாக தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, MK Stalin