ஹோம் /நியூஸ் /சென்னை /

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

அமைச்சர் பெரியகருப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர் பெரியகருப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"கடந்த காலங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய போது குறைகளை சுட்டிக்காட்டிப்பட்டது. அதனை தவிர்க்கும் விதமாக கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை"

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் முடிவை அறிவிப்பார் எனவும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் மாவட்டங்களில் இருந்து வந்த கூடுதல் பதிவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் தொகுப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க எப்படி திட்டமிடபட்டுள்ளது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், “கடந்த காலங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய போது குறைகளை சுட்டிக்காட்டிப்பட்டது. ஒரு சில இடங்களில் நடந்த தவறுகளை மிகைப்படுத்தி தகவல்கள் பரப்பட்டதால் அதனை தவிர்க்கும் விதமாக கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சரே முடிவு செய்வார். எதிர்கட்சியினரும் திமுகவின் தோழமை கட்சிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசித்துவருகிறார்” எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Minister, Pongal Gift, Ration Shop