Home /News /chennai /

விருந்தோம்பல், சுயமரியாதை தமிழரின் பிரிக்க முடியாத பண்புகள் - பிரதமர் ட்வீட்க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

விருந்தோம்பல், சுயமரியாதை தமிழரின் பிரிக்க முடியாத பண்புகள் - பிரதமர் ட்வீட்க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழரின் பிரிக்க முடியாத பண்புகள் செஸ் ஒலிம்பியாட்டுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரம்மாண்டமாக நடத்தி முடித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

    செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்தாண்டு நடைபெற்றது. ஜூலை 28ஆம் தேதி பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுடன் இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து பங்கேற்று போட்டியை தொடங்கிவைத்தார். இந்த பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது இதுவே முதல்முறை.

    இந்நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக "நடத்தி காட்டிய தமிழ்நாடு அரசு மற்றும் மக்களுக்கு பாராட்டுக்கள். உலகம் தமிழ்நாட்டின் காலசாரத்தையும் விருந்தோம்பலையும் இதன் மூலம் அறிந்து கொண்டுள்ளது" என பிரதமர் மோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: 'தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை கொண்டு வருவது எனது நோக்கம்' - பாஜக தலைவர் அண்ணாமலை

    பிரதமரின் இந்த ட்விட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பல், சுயமரியாதை ஆகிய இரண்டும் தமிழரின் பிரிக்கமுடியாத இரு பண்புகள்.


    இது போன்ற சர்வதேச நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த உங்களின் ஆதரவு தொடர்ந்து தேவை" என முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: CM MK Stalin, PM Modi

    அடுத்த செய்தி