முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட கண்காட்சியில் ஒருசில படங்களை கண்டு, முதலமைச்சரின் சகோதரி செல்வி கண் கலங்கினார்.
முதலமைச்சரின் இளமைப் பருவம், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை, பங்கேற்ற போராட்டங்கள், சிறை அனுபவ புகைப்படங்கள் ஆகியவை, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை அரசியல் கட்சியினர், பிரபலங்கள் பார்த்திருந்த நிலையில், இறுதிநாளில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சிறுபான்மையினர் நலவாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
முதலமைச்சரின் மருமகன் சபரீசன் தனது குடும்பத்தினருடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து முதல்வரின் சகோதரி செல்வியும் கண்காட்சியை பார்வையிட வந்தார். மிசா சட்டத்தில் ஸ்டாலின் சிறையில் இருந்த காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை கண்ட செல்வி, கண் கலங்கினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடலை, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியபோது, மு.க.ஸ்டாலின் கண்கலங்கி நின்ற புகைப்படத்தை பார்த்த செல்வி மீண்டும் கண்ணீர் ததும்ப நின்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, MK Stalin, MK.selvi