ஹோம் /நியூஸ் /சென்னை /

வீடியோ: விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு உதவிய முதலமைச்சர் ஸ்டாலின்!

வீடியோ: விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு உதவிய முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி, இறங்கி சென்று பார்த்தார். அப்போது அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட முதலமைச்சர், உடனடியாக அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை அண்ணாசாலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்தார். அதன் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

  சென்னை அண்ணாசாலையில் இன்று காலை, டி.எம்.எஸ், மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்தார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

  அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி, இறங்கி சென்று பார்த்தார். அப்போது அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட முதலமைச்சர், உடனடியாக அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஒரு காவலரை அவருடன் அனுப்பி வைத்தார்.
   
  View this post on Instagram

   

  A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)  அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலனை உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai, CM MK Stalin