ஹோம் /நியூஸ் /சென்னை /

'மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை’ - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

'மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை’ - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டங்கள் என்பது சலுகை அல்ல என்றும் அவை அனைத்தும் கடமை - மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி அல்லாதோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  உறுதியளித்துள்ளார்.

    சென்னை கோபாலபுரத்தில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 54 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    பின்னர் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகள் எனும் பெயர் சூட்டி அவர்களுக்கென தனி துறையை உருவாக்கி செயலாற்றியதை நினைவுகூர்ந்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டங்கள் என்பது சலுகை அல்ல என்றும் அவை அனைத்தும் கடமை என்றும் கூறினார்.

    ''மகளிர் சுய உதவி குழு கடன் விரைவில் தள்ளுபடி'' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு 

    இதனையடுத்து பேசிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் சிம்மசந்திரன், “மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி அல்லாதோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர், “இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அறிவித்துவிட்டு போய்விடலாம் ஆனால் அதை நிறைவேற்றி தர வேண்டும். நிச்சயம் நிறைவேற்றி தருவேன்” என உறுதியளித்தார்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Marriage