முகப்பு /செய்தி /சென்னை / "மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் திறமையால் முன்னேறியவர்" - முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் புகழாரம்!

"மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் திறமையால் முன்னேறியவர்" - முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் புகழாரம்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

முதலமைச்சர் ஸ்டாலினின் படிபடியான உயர்வை படம்பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம் - கமல்ஹாசன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் தனது திறமையால் முன்னேறியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் நடைபெறும் முதலமைச்சர் குறித்த புகைப் படக் கண்காட்சியை கமல்ஹாசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த வருகை பதிவேட்டில், “மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக, தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும், சவாலையும் அனுபவித்து ஏற்றவர். அவரின் படிபடியான உயர்வை படம்பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம், நன்றி” என குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “அரை நூற்றாண்டுத் தமிழக அரசியல் வரலாற்றில் தனித்தடம் பதித்த முதல்வரின் வாழ்க்கைப்பயணத்தை இன்றைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ள இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் திமுக உடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, “திமுக, காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது, சீன் பை சீன் ஆக தான் நகர்த்த வேண்டும் இப்போதே க்ளைமேக்ஸ்க்கு செல்லக்கூடாது” என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, DMK Alliance, Kamal Haasan