ஹோம் /நியூஸ் /சென்னை /

மாண்டஸ் புயல் பாதிப்பு : நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மாண்டஸ் புயல் பாதிப்பு : நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ள நிலையில், அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் பகுதிகளில் புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கொட்டிவாக்கம் மீனவ கிராமத்துக்கு சென்ற முதலமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். சேதம் அடைந்த படகுகளின் விவரங்கள் குறித்து மீனவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.

பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ள நிலையில், அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து பாலவாக்கம் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 98 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சென்னையில் 400 மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றார். 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், 300 இடங்களில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேவையெனில் மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai rains, CM MK Stalin, Cyclone Mandous