ஹோம் /நியூஸ் /சென்னை /

ரூ.10 லட்சம் காசோலை.. கையோடு பணி ஆணை.. மாணவி பிரியா வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர்..

ரூ.10 லட்சம் காசோலை.. கையோடு பணி ஆணை.. மாணவி பிரியா வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர்..

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மாணவி பிரியாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மருத்துவர்களின் கவன குறைவால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

  சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி பிரியா, கால்பந்து பயிற்சியின் போது தசைப்பிடிப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்களின் கவனக் குறைவால் அவரது கால் அகற்றப்பட்ட நிலையில், உடல்நலம் குன்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிரியாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாணவி பிரியாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

  இதையடுத்து, அரசு அறிவித்த 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை பிரியாவின் பெற்றோரிடம் ஒப்படைத்த முதலமைச்சர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கான ஆணையையும் வழங்கினார். மேலும் பிரியாவின் மூத்த சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார்.

  இன்ஸ்டாகிராமில் காதல் வலை.. பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது 

  தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாணவி பிரியாவின் புகைப்படங்களையும், பிரியா பெற்ற பதக்கங்களையும் பார்வையிட்டார். மகளின் உயிரிழப்பில் உரிய நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் என பிரியாவின் பெற்றோருக்கு முதலமைச்சர் உறுதியளித்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai, CM MK Stalin