Home /News /chennai /

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்வர் ஆலோசனை

முதல்வர் ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழக அரசு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் தொடர்ச்சியாக அரசக்கு கோரிக்கை விடுத்து இருந்தனார்.

    இதனையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு அமைத்து தமிழக அரசு. ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்தும், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்குழு அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது.

    இதையடுத்து, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக, கடந்த வாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதையும் படிங்க: அகவிலைப்படி யாருக்கெல்லாம் உயர்த்தி வழங்கப்படும்? தமிழக அரசு விளக்கம்

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Addicted to Online Game, CM MK Stalin, Online rummy

    அடுத்த செய்தி