ஹோம் /நியூஸ் /சென்னை /

மழைநீர் வடிகால் கட்டுமானத்தில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு முதல்வர் இரங்கல்.. நிவாரண நிதி அறிவிப்பு!

மழைநீர் வடிகால் கட்டுமானத்தில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு முதல்வர் இரங்கல்.. நிவாரண நிதி அறிவிப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின், செய்தியாளர் முத்துகிருஷ்ணன்

முதலமைச்சர் ஸ்டாலின், செய்தியாளர் முத்துகிருஷ்ணன்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

  சென்னை தரமணி அடுத்த கந்தன் சாவடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (24). இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று (22.10.2022) இரவு சென்னை, ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

  இவருடன் சென்றுக்கொண்டிருந்த சக செய்தியாளர்கள் இவரை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இதையும் வாசிக்க: விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர் : உறுப்பு தானம் மூலம் 7 ​​உயிர்களை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

  உயிரிழந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Journalist