முகப்பு /செய்தி /சென்னை / புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

ஸ்டாலின் ஜேக்கப்

ஸ்டாலின் ஜேக்கப்

செங்கல்பட்டு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடன் பயணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார்.

நேற்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படம்

இந்நிலையில் இத்துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” என குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: Accident, CM MK Stalin, Death