முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் மழைநீர் தேங்காத மழைக்காலம்... முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

சென்னையில் மழைநீர் தேங்காத மழைக்காலம்... முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியருடன் முதலமைச்சர் ஸ்டாலின் மதிய உணவு அருந்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் மழைநீர் தேங்காத பருவமழை காலங்களை மக்கள் பார்ப்பார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக ரிப்பன் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் பாதிப்பின் போது சிறப்பாக பணியாற்றிய 39 நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா மற்றும் மிகப்பெரிய மழை பாதிப்பை வென்றுள்ளதாகவும், இந்த இரண்டு சாதனைக்காக மக்களிடையே பாராட்டு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த மழையுடன் இந்த பருவ மழை பாதிப்பை ஒப்பிட்டு மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டியதை பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மதிய உணவு அருந்தினார்.

First published:

Tags: Chennai corporation, Chennai Corporation worker, CM MK Stalin, Monsoon rain, Sanitary workers