ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை அம்பத்தூர் பகுதிகளில் மலைபோல் குப்பைகள் தேக்கம்.. துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்

சென்னை அம்பத்தூர் பகுதிகளில் மலைபோல் குப்பைகள் தேக்கம்.. துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்

குப்பைகள் குவிந்து கிடக்கும் அம்பத்தூர்

குப்பைகள் குவிந்து கிடக்கும் அம்பத்தூர்

Ambattur | அம்பத்தூரில் பகுதிகளில் 400 டன் அளவு குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளது. வீதிக்கு வீதி மலை போல் குப்பைகள் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று பரவும் பயம் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ambattur, India

  சென்னை மாநகராட்சி மண்டலம் 7க்கு உட்பட்ட 11 வார்டுகளில் கடந்த மூன்று நாட்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு தீர்வு எட்டப்பட்ட நிலையில் காலை 6 மணிக்கு பிறகும் பணியாளர்கள் வேலைக்கு திரும்பாததால் குப்பைகள் அகற்றாமல் சாலைகளில் மலை போல் குவிந்து இருக்கின்றன.

  மேலும் கால்நடைகள் குப்பை தொட்டிகளை சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பாகவும் அதிகம் குப்பை தேக்கமடைந்து இருப்பதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

  குறிப்பாக அம்பத்தூர், லெனின் நகர், கள்ளிகுப்பம், புதூர், ஒரகடம், பாடி குப்பம், பாடி புது நகர்,டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் அவென்யூ, கொரட்டூர், சிவானந்தா நகர், டீச்சர் காலனி, ராம் நகர், விஜயலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான குப்பைகள் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

  Also see... குதிரையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கூல் சுரேஷ்..!

  தேங்கியிருக்கும் குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அரசு அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ambattur Constituency, Cleaning workers