தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான 7வது சுற்று பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திலிருந்து சிஐடியு வெளிநடப்பு செய்தது. அப்போது செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: " பேச்சுவார்த்தையில் உள்ள ஒவ்வொரு அம்சத்திலும் சிஐடியு உழைப்பு பங்களிப்பு உள்ளது. 90 விழுக்காடு ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளோம்.
ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தவும், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற 21 வேலை நிறுத்த நாட்களை பணி நாளாக மாற்றி ஊதியம் வழங்க மறுத்ததை கண்டித்தும் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த பாதக அம்சத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” இவ்வாறு அவர் கூறினார்.
Also see... மதுரை:காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்;6 உணவகங்களுக்கு நோட்டீஸ் - உணவு பாதுகாப்பு துறை அதிரடி!
இந்த ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் உள்ளிட்டு 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் கையெழுத்திடவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.