ஹோம் /நியூஸ் /சென்னை /

சித்ரா வழக்கில் திருப்பம்! குற்றம்சாட்டும் கணவர்..நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி..

சித்ரா வழக்கில் திருப்பம்! குற்றம்சாட்டும் கணவர்..நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி..

சித்ரா வழக்கில் திருப்பம்! குற்றம்சாட்டும் கணவர்..நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி..

Chithra Suicide Case | ஹேம்நாத் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சித்ரா தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து புதிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  நடிகை சித்ரா தற்கொலை செய்து 2 ஆண்டுகளாகிறது. ஆனால் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே அவரது கணவர் ஹேம்நாத் 4 நபர்களின் பெயரை குறிப்பிட்டு கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் விடுதலையாகியுள்ளார். இந்நிலையில் ஹேம்நாத் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சித்ரா தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து புதிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

  தன்னை சிலர் டார்ச்சர் செய்து, எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என முயற்சிப்பதாக ஹேம்நாத் தெரிவித்துள்ளார். சித்ராவின் மரணம் குறித்து சில ரகசியங்கள் குறிஞ்சி செல்வன், ரக்சன், சிவப்பிரபு, சையத் ரோஹித் ஆகியோருக்கு தெரியும் என்கிறார் ஹேம்நாத். சித்ராவுக்கு தெரிந்த நிறைய விஐபிக்கள் உள்ளனர். ஆனால் தான் குறிப்பிட்ட சிலரை மட்டும் கூறுவதற்கு காரணம் உள்ளது என்கிறார் ஹேம்நாத்.

  Read More : ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தை... இரண்டே மணி நேரத்தில் மீட்பு... அதிரடி காட்டிய போலீசார்!

  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது ரோஹித் பொய்யான புகார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?யாருடைய தூண்டுதலின்பேரில் ரோஹித் இவ்வாறு செயல்படுகிறார்? என அவரது வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஹேம்நாத் பேட்டியால் விஜபிக்கள் பாதிக்கப்படுவதாக ரோஹித் தனது மனுவில் கூறியிருந்தார்.அப்படி, ரோஹித் குறிப்பிட்ட விஐபிக்கள் யார்? அவர்களின் பெயர் விவரம் என்ன என்பதை ரோஹித் தெரிவிக்க வேண்டும் என்கிறார் ஹேம்நாத்தின் வழக்கறிஞர்.

  ரோஹித் கூறிய விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்கிறார் கலைச்செல்வன். ரக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து அவரது தரப்பில் விளக்கம் கேட்டது நியூஸ்18தமிழ்நாடு.

  சித்ரா தற்கொலை செய்துகொண்ட தொடக்க நாட்களிலேயே ரக்சனிடம் போலீசார் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ரக்சனுக்கும், சித்ரா தற்கொலை கொண்ட விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, தேவையில்லாமல் அவரின் பெயரை ஹேம்நாத் கூறிவருகிறார் என்கிறது ரக்சன் தரப்பு.

  போலீசார் விசாரணை நடத்தினால் அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என ரக்‌சன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஹேமந்த் குற்றம்சாட்டியுள்ள விமலம் மெஸ் உரிமையாளர் குறிஞ்சி செல்வனின் மேலாளர் வடிவேலை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது நியூஸ்18 தமிழ்நாடு. ஆனால், குறிஞ்சி செல்வன் தரப்பில் உரிய விளக்கம் இதுவரைக்கும் அளிக்கப்படவில்லை.  நீதிமன்றத்தில் வழக்கு நடந்துக்கொண்டிருக்கும் நிலையில் ஹேம்நாத்தின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Crime News