முகப்பு /செய்தி /சென்னை / பள்ளி மாணவிகளிடம் ஆபாச படம் காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது

பள்ளி மாணவிகளிடம் ஆபாச படம் காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது

கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர்

கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர்

Chitlapakkam Driver Arrest pocso act | கடந்த ஒரு வருடங்களாக மாணவிகளிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ஓட்டுநர் ஒப்புதல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

குரோம்பேட்டை அருகே தனியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளை குறிவைத்து செல்போனில் ஆபாச வீடியோகளை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கார் ஓட்டுனர் பொக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் வினோபாஜி நகரை சேர்ந்த 15 வயது மாணவி பள்ளிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் வந்த நபர் ஒருவர் செல்போனில் விலாசம் கேட்பது போல் அந்த மாணவியிடம் ஆபாச வீடியோக்களை காட்டி தவறாக நடக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளிக்கு ஓடி சென்று தலைமையாசிரியரிடம் இது குறித்து தெரிவித்த்தை அடுத்து பொதுமக்கள் உதவியுடன் தப்ப முயன்ற அந்த நபரை பிடித்து சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அந்த ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா (25) என்பதும் கால் டாக்சி ஓட்டுனராக வேலை பார்க்கும் இவர் தனியாக நடந்து செல்லும் மாணவிகளை குறிவைத்து இது போன்ற செயலில் கடந்த ஒரு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது ஓப்புகொண்டார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சூர்யாவை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chennai, Crime News, POCSO case