ஹோம் /நியூஸ் /சென்னை /

தரையில் இருந்த மீன் தொட்டி.. தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.. சென்னையில் சோகம்!

தரையில் இருந்த மீன் தொட்டி.. தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.. சென்னையில் சோகம்!

மீன் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

மீன் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

சென்னை, அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் யுவராஜ். இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். அவருக்கு  கௌசல்யா என்ற மனைவி உள்ளார். நேற்று வழக்கம்போல் யுவராஜ் பணிக்கு சென்று விட்டார். கௌசல்யா வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்துள்ளார்.

    இவர்களது ஒன்றை வயது பெண் குழந்தை மீனாட்சி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டின் தரையில் கீழே வைத்திருந்த மீன் தொட்டியில் மீனாட்சியின் விளையாட்டு பொருள் விழுந்துள்ளது. விளையாட்டுப் பொருளை எடுக்க மீனாட்சி முற்படும்பொழுது தலைக்குப்புற கவிழ்ந்து மீன் தொட்டி உள்ளே விழுந்துள்ளார்.

    இதனை கவனிக்காத கௌசல்யா வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டிருந்தார். 10 நிமிடம் கழித்து கௌசல்யா உள்ளே வந்து பார்க்கும் பொழுது குழந்தை தலைகீழாக மீன் தொட்டியில் விழுந்திருப்பதைக் கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    Also see... கனமழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    அப்போது  குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Child, Dead, Fish