ஹோம் /நியூஸ் /சென்னை /

“ஆட்டோ லாக் ஆன ரூம் டோர்...” கதறிய பச்சிளம் குழந்தை.. கொரட்டூரில் பரபரப்பு..

“ஆட்டோ லாக் ஆன ரூம் டோர்...” கதறிய பச்சிளம் குழந்தை.. கொரட்டூரில் பரபரப்பு..

மீட்கப்பட்ட குழந்தை

மீட்கப்பட்ட குழந்தை

Chennai News : வீட்டின் உள்ளே விளையாடி கொண்டிருந்த குழந்தை கதவை உள்பக்கம் தாழிட்டு கொண்டது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கொரட்டூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதலாவது மாடி பகுதியில் பரத் - பிரியா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்வின் என்ற 1 வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் பாரத்தின் அம்மாவிடம் குழந்தையை விட்டுவிட்டு தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்றனர். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் உள்ளே விளையாடி கொண்டிருந்த தன்வின்  அறையின் கதவை உள்பக்கம் மூடிக்கொண்டது. இதனால் ஆட்டோ லாக் ஆனதாக கூறப்படுகிறது.

இதனிடையே, குழந்தை  வீட்டுக்குள் அழும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியாத நிலையில் உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க : பாலாற்றில் வெள்ளம்.. கரையோரம் உள்ள 30 கிராம மக்களுக்கு எச்சரிக்கை... முழு விவரம்..

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட வீரர்கள்  துரிதமாக செயல்பட்டு ஹைட்ராலிக் கட்டிங் இயந்திரம் மூலம் கதவை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

குழந்தையை துரிதமாக மீட்ட தீயணைப்பு மீட்பு  துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : கன்னியப்பன் - ஆவடி

First published:

Tags: Chennai, Local News