முகப்பு /செய்தி /சென்னை / டிஜிபி அலுவலக எதிரே நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் பாலியல் சீண்டல்: குழந்தைகள் உரிமை ஆர்வலர் வேதனை

டிஜிபி அலுவலக எதிரே நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் பாலியல் சீண்டல்: குழந்தைகள் உரிமை ஆர்வலர் வேதனை

குழந்தைகள் உரிமை ஆர்வலர் கன்னியாபாபு

குழந்தைகள் உரிமை ஆர்வலர் கன்னியாபாபு

Chennai Dgp Office | காலையிலேயே கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் செல்வதால் அவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது தற்காத்துக் கொள்ள முடியுமா? கேள்வி எழுப்பினார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை டிஜிபி அலுவலக எதிரே நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்கள் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் பாலியல் ரீதியாக சீண்டல் செய்வதாக குற்றம் சாட்டி சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலர் கன்னியாபாபு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இன்று காலை டிஜிபி அலுவலக எதிரே நடைபயிற்சி மேற்கொள்ளும்போது மர்ம நபர்கள் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் பாலியல் ரீதியாக சீண்டல் நடைபெற்றதை தான் தட்டிக் கேட்டதாகவும், அதன் பின்பு ரோந்து காவலர்கள் யாரும் வராததால் நேரடியாக டிஜிபி அலுவலக வாசலில் உள்ள காவலரிடம் தெரிவித்தும் மர்ம நபர்கள் தன்னை ஆபாசமாக பேசியதாகவும், அப்போது தான் அவர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மர்ம நபர்கள் தன்னைத் தாக்க முற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கும் எனவும் அதை அடிப்படையாக வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக சென்னையில் காலை நேரங்களில் அதிக பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் மேலும் காலையிலேயே கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் செல்வதால் அவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது தற்காத்துக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறிதான் என தெரிவித்துள்ளார். எனவே பெண்கள் பாதுகாப்பாக உணர அதிகாலையிலும் இரவு நேரங்களிலும் காவலர்கள் ரோந்து பணியை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் துறை சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகள் உரிமை ஆர்வலர் கூறிய கருத்துக்களை கேட்டுக் கொண்டதாகவும், நீங்கள் கூறிய தகவல்களையும் வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பதில் அளித்துள்ளது.

First published:

Tags: Chennai